தேசிய தன்னார்வ இரத்த தான தின நிகழ்ச்சி

0பார்த்தது
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. உடல் நலத்தைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், 68 இரத்ததான முகாம் அமைப்புகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி