திண்டுக்கல்லில் பட்டதாரி பெண்களின் செல்போனுக்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், தாம் சென்னை தலைமை செயலகத்திலிருந்து பேசுவதாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சிஸ்டம் ஆப்ரேட்டர் வேலை இருப்பதாகவும், அதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ. 3,750-ஐ QR கோடு மூலம் அனுப்பும்படியும் கூறியுள்ளார். இதுபோன்ற நூதன மோசடிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.