தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில், கோவை ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் இன்று (21.11.25) மதியம் 1:30 மணியளவில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் வருகை தந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்திரா கணவர் துவாரக நாதன் உடன் ஆர்.எம். காலனி அருகே செவாலியர் சிவாஜி நகரில் வசித்து வருகிறார். சோதனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், திமுக தொண்டர்கள் இந்திராவின் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி. செந்தில்குமார், இந்திரா மற்றும் மூன்று வர்த்தக நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.