கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வஉசி நகர் பகுதியில் வீட்டு பராமரிப்பு
வேலை நடைபெற்றபோது, வீட்டின் அருகே இருந்த தடுப்பு சுவர் சரிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.