திண்டுக்கல், வத்தலகுண்டு பைபாஸ் மேம்பாலத்தில் நடந்த சாலை விபத்தில் முத்தழகு பட்டியை சேர்ந்த ராபின்(26) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.