திண்டுக்கல்: நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்

1685பார்த்தது
திண்டுக்கல்: நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி, வலையபட்டி பகுதியைச் சேர்ந்த கருணகிரி (50) என்பவர் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்தார். அவருக்கு கடவூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி