வத்தலகுண்டு அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், ஆர்த்தி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்டோபர் 10 அன்று ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாமனார் சந்திரன், மனைவி, மகன் நிவின் கைது செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியர், சந்திரன், நிவின் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நிலக்கோட்டை போலீசார் அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.