திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டி காஞ்சி ஆற்றுப்பகுதியில் கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு நடைபெற்ற படுகொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.