திண்டுக்கல் அருகே சீலப்பாடி, சிவனாண்டிகொட்டத்தை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து(34) என்பவர் கடன் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.