ரயிலில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

0பார்த்தது
ரயிலில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி
திருநெல்வேலியில் இருந்து விழுப்புரம் செல்லும் செந்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த புஷ்பராஜ் (27) என்பவர், தனது சக ஊழியர்களுடன் விழுப்புரம் வரை முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டியில் படியில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல் அருகே அம்பாத்துரை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய போலீசார், புஷ்பராஜின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.