திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனுமதியில்லாத லோன் ஆப்கள் மூலம் கடன் பெறுவதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆப்கள் தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடன் பெற விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளை அணுகி பாதுகாப்பான முறையில் கடன் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.