திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி ஆண்டிப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் S. M. ராஜா என்பவர் மனு அளித்தார். 2016-ல் திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலில் நடந்த குடமுழுக்கு தொடர்பாக, தெற்கு பார்த்திருந்த அம்மன் கோவிலை கிழக்கு பார்த்துக் கட்டியதும், துர்க்கை அம்மன், கருடாழ்வார், முருகன், மயில் போன்ற சிலைகளைக் கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதன் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.