திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள அரசியல் கட்சி ஆக்கிரமிப்புகள் மற்றும் கல்வெட்டு தூண்களை அகற்றக் கோரி மனு அளித்தனர். நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணைச் செயலாளர் முத்தரசி தலைமையில் கட்சியினர் இந்த மனுவை அளித்தனர்.