திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் கூறி வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாகவும், முகவரிக்கு சட்டவிரோத பொருட்கள் வந்துள்ளதாகவும் கூறி வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் மோசடி புகார்கள் இருந்தால், உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime. gov. in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.