திண்டுக்கல் அங்கு நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் திண்டுக்கல் மாநகர், செட்டிநாயக்கன்பட்டி, சென்னம்மநாயக்கன்பட்டி, என். எஸ் நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.