தமிழகத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து நாகல்நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநகர செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மாநகராட்சி மேயர் இளமதி நன்றி தெரிவித்தார்.