திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க பொறுப்பாளர்கள் பிரபு, நாகராஜ், ஒன்றிய செயலாளர் பழனிவேல், நகரச் செயலாளர் வெள்ளிக்கழவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராயன் குமார் மற்றும் துணைச் செயலாளர் கார்கில் கண்ணன், சந்தானம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.