தமிழகம் முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ். ஐ. ஆர். சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அவசர அவசரமாக இந்த பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பி. செந்தில்குமார் பேசுகையில், "நானும் ரவுடிதான்" என்ற பானியில் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளன.