கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

2பார்த்தது
கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்
திண்டுக்கல்லில் உள்ள எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் 80 கௌரவ விரிவுரையாளர்கள், தங்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக கண்ணில் கருப்பு துணி கட்டி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு குறுகிய காலத்திலும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் போராடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 8,000 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.