பழங்குடியினர் தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டம், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கடைபிடிக்க வலியுறுத்தி நாடுதழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணசாமி மாநகர செயலாளரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். ஏ. பி. மணிகண்டன் மாவட்ட செயலாளர் சிறப்புரை ஆற்றினார். மூத்த மாவட்ட குழு உறுப்பினர் ராஜாமணி, நத்தம் ஒன்றிய செயலாளர் பி. வெள்ளைச்சாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் தோழர் சாந்தி, ஏஐடியுசி கௌரவ தலைவர் தோழர் சந்திரமோகன், ஏஐடியுசி போக்குவரத்து மாவட்ட செயலாளர் தோழர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திண்டுக்கல் மாநகர துணை செயலாளர் சுப்பிரமணி நன்றி உரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி