திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சீலப்பாடி ஊராட்சியில் கே. ஏ. எம். நகர், பாரதியார் தெரு பகுதிகளில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. தற்போது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.