மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மணிக்கூண்டு பகுதியில் CITU, AITUC, LPF, MLF, HMS, INTUC உள்ளிட்ட தொழில் சங்கங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.