அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

6பார்த்தது
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும், வடமாநிலங்களில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்திற்கும் கண்டனம் தெரிவித்து, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, கிறிஸ்தவ மக்கள் முன்னணி மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து பேகம்பூர் வத்தலகுண்டு சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறுபான்மை மக்களின் மதவழிப்பாட்டை உறுதிபடுத்த கோரியும், பாசிச சங்பரிவார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.