தற்பொழுது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும், பாஜக அரசின் ஜனநாயக படுகொலையையும் கண்டித்து, தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கல்லில் இன்று 04.02.26 அன்று மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.