திண்டுக்கல் பேகம்பூர் சந்திப்பில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரான் உச்ச அதிபர் தூஅயத்துல்லால் அலில்கமேனியை படுகொலை செய்த இஸ்ரேல் அதிபரையும், அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமுமுக மாவட்ட தலைவர் ஷேக் பரீத் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.