தமிழக அரசு காலிபணியிடங்களை முறையான ஊதிய விகிதங்களில் நிரப்ப வேண்டும், அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி, எல். ஐ. சி ஊழியர் சங்க நிர்வாகி வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.