தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் போராட்டம்

0பார்த்தது
திண்டுக்கல்லில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களப் பணியாளர்களின் பணிச் சுமையை போக்க வேண்டும், பணிகளை முறைபடுத்த வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவிகளை மீளப்பெற வேண்டும், ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும், நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி