திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன் படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 16,72,075 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8,12,937 ஆண் வாக்காளர்கள், 8,58,964 பெண் வாக்காளர்கள் மற்றும் 174 மூன்றாம் பாலினத்தோர் அடங்குவர். மாவட்டத்தில் மொத்தம் 2301 வாக்கு சாவடிகள் உள்ளன.