மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

4பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதிநவீன வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படங்கள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திரையிடப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.