தொழிலாளர்களின் 4 புதிய சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திண்டுக்கல்லில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட கவுன்சில் செயலாளர் அழகர்சாமி, சி. ஐ. டி. யு. மாநில பொருளாளர் ராஜேந்திரன், ஐ. என். டி. யு. சி மாவட்ட தலைவர் முருகன், ஏ. ஐ. டி. யு. சி மாவட்ட தலைவர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாநகர செயலாளர் மற்றும் துணை மேயருமான ராஜப்பா மறியல் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.