ஒட்டன்சத்திரத்தை அடுத்த வாகரையை சேர்ந்த முருகசாமி (75) என்பவரிடம், திருப்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் பிரபு (42) 15.7 சென்ட் இடத்தை ரூ.87 லட்சத்திற்கு விலை பேசி, முன் பணமாக ரூ.60.98 லட்சத்தை பெற்றுக்கொண்டார். 3 ஆண்டுகளாக நிலத்தை எழுதி கொடுக்காமல் அலைகழித்ததால் முருகசாமி பணத்தை திரும்ப கேட்டார். ரூ.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பிரபு, எஞ்சிய ரூ.35.98 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் பிரபு கைது செய்யப்பட்டார்.