மத நல்லிணக்க கந்தூரி விழா 20, 000 பேருக்கு அன்னதானம்

3பார்த்தது
திண்டுக்கல் பேகம்பூரில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் 8வது ஆண்டாக கந்தூரி விழா நடைபெற்றது. கரீபுன் நவாஸ் கந்தூரி குழு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஜாதி, மத பேதமின்றி சுமார் 20,000க்கும் மேற்பட்டோருக்கு சுடச்சுட பிரியாணி, தால்சா, கேசரி வழங்கப்பட்டது. பேகம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து உணவுகளைப் பெற்றுச் சென்றனர். இந்த விழா இன்று (08.11.25) காலை 7 மணிக்குத் துவங்கியது.