திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள குல்தீப் நாராயண் தலைமையில், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் முன்னிலையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, நிலக்கோட்டை வாக்காளர் பதிவு அலுவலர் சுகுமார், நிலக்கோட்டை வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.