பழனியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகனுக்கு மின்வாரியத்தில்
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த மகாதேவன், அவரது மனைவி லட்சுமி, சீனிவாசன் ஆகிய மூவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கில், முதல் குற்றவாளியான மகாதேவன் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி லட்சுமி மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.