சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு பெற்றது. பயிற்சி நிறைவு நாளான இன்று (28.02.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப் கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும், பயிற்சி பயிற்றுநர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.