பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

12பார்த்தது
திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன், மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.