சிவகங்கை 21-வது வார்டில், தூய்மைப் பணியாளர்கள் இனி விசில் பயன்படுத்தக் கூடாது என திமுக கவுன்சிலர் உத்தரவிட்டு, அவரிடமிருந்து விசில் பிடுங்கி குப்பை வண்டியில் வீசினார். தமிழகத்தில் குப்பை சேகரிக்கும் போது விசில் ஊதும் நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. தேர்தல்கள் நெருங்கும் நிலையில், இது போன்ற செயல்கள் அரசுக்கு இழிவுபடுத்துவதாகவும், சுயவிளம்பரத்திற்காக செயல்பட்ட நகர்மன்ற உறுப்பினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.