திண்டுக்கல்: சீலப்பாடி ஊராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று(மார்ச் 19) நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் எனப் பலர் உடன் இருந்தனர்.