திண்டுக்கல் மாநகராட்சி இரண்டாவது வார்டு, சிவாஜி கணேசன் 2-வது தெருவில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாகவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.