திண்டுக்கல்: தொழில்பேட்டையில் ரூ.27,500 கொள்ளை - இருவர் கைது

822பார்த்தது
திண்டுக்கல்: தொழில்பேட்டையில் ரூ.27,500 கொள்ளை - இருவர் கைது
திண்டுக்கல் சிட்கோ தொழில்பேட்டையில் கடந்த மாதம் முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான லேத் ஒர்க் ஷாப்பில் ரூ.12,500 மற்றும் சித்தார்த் என்பவருக்கு சொந்தமான மெட்டல் கம்பெனியில் ரூ.15,000 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், திருச்சியை சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் வடமதுரை சேர்ந்த பாண்டியராஜ் (28) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி