திண்டுக்கல் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கும் சிறப்பு முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களால் திண்டுக்கல் செசிலியாஸ் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பாரதி, மாவட்ட சுகாதார அலுவலர் செல்வக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.