பேகம்பூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

1663பார்த்தது
திண்டுக்கல்லில் உள்ள பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில், இமாம் ரபீக் அகமது யூசுபி தலைமையில் இன்று (மே 28) காலை 7.30 மணிக்கு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையை நிறைவேற்றினர். தொழுகைக்குப் பிறகு, பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி