மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

2பார்த்தது
திண்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் கேஎஃப்சி பால் பந்தாட்ட கழகம் சார்பில் 14 ஆம் ஆண்டு ஐவர் கால்பந்தாட்ட மாநிலப் போட்டிகள் பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி போட்டிகளை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் எஸ் டி எஸ் ஏ அணிக்கும் சென்னை ஜேப்பியார் டர்ப் அணிக்கும் இடையே முதல் போட்டி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து 40 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் மூன்று நாட்கள் போட்டிகள் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி