திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் திண்டுக்கல் ப்ளூஸ் ஹாக்கி கிளப் சார்பில் நடைபெற்ற முதலாம் ஆண்டு எழுவர் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், இறுதிப் போட்டியில் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி ஹாக்கி கிளப் அணி, திண்டுக்கல் ப்ளூஸ் ஹாக்கி கிளப் அணியை டைப்ரைக்கர் முறையில் 1:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற கோயம்புத்தூர் அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் ரூ. 15,000 ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பிடித்த திண்டுக்கல் ப்ளூஸ் ஹாக்கி கிளப் அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.