மின்னொளியில் செல்லாண்டியம்மன் வீதி உலா!

55பார்த்தது
மின்னொளியில் செல்லாண்டியம்மன் வீதி உலா!
திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று, செல்லாண்டி அம்மன் வண்ணமயமான மின்னொளி அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கண்கொள்ளா காட்சியை காண திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி