திண்டுக்கல் விடியல் குழு கலையரகம் சார்பில் நடைபெற்ற கோடைகால மாணவர்களின் கலை பயிற்சி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவர்கள் நடனம், இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பயிற்சி நிறைவு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.