திண்டுக்கல் பிச்சாண்டி மகாலில் தமிழ்நாடு பொதுவிநியோக ஊழியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பால்ராஜ் மற்றும் மாநிலச் பொதுச்செயலாளர் குமரி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக அரசை கண்டித்தும், தாயுமானவர் திட்டத்தை நிராகரித்தும், கூட்டுறவு துறைக்கு தொடர்பில்லாத ஐஏஎஸ் தலைமையிலான குழு அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை ஊழியர்கள் வலியுறுத்தினர்.