டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மாவட்ட மேலாளர் ஆஜராக உத்தரவு

521பார்த்தது
டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மாவட்ட மேலாளர் ஆஜராக உத்தரவு
திண்டுக்கல்லைச் சேர்ந்த 30 பேர் தங்களுக்குச் சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகை கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டும் வழங்கப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் அக்டோபர் 16 முதல் நவம்பர் 6 வரையிலான வருமானம் மற்றும் வங்கி விபரங்களுடன் நவம்பர் 7 அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். டாஸ்மாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.