பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு இன்று, பிப்ரவரி 9ம் தேதி திங்கட்கிழமை, மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் 3 மணி நேர கடையடைப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தால் மதுக்கடைகள் இயங்காது.