பழனி: கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

1152பார்த்தது
பழனி: கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2018-ம் ஆண்டு பவித்ரா என்ற பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், ராமகிருஷ்ணன் (எ) மாயவன் என்பவருக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பழனி அடிவாரம் போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞரின் முயற்சியால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.